உன்னோடு நான் இதுவரை பேசியதில்லை..
நான் பேசும் முதல் வார்த்தை இன்னும்
அகராதியில் அகப்படவில்லை.....
சிட்டுப்போல் என் மன வானில் பறப்பாய்..
மாலை செந்தேனாய் என் நெஞ்சில் சுரப்பாய்..
சின்ன மொட்டுபூ கண்களினால்...
மோகம் எனும் கவி படிப்பாய்...!
கண்டிப்பாய்...!!!
மின்வீச்சை ஒரு நாள் கண்டேன் ..!
அதை மிஞ்சி விட்டது உன் பார்வை என்பேன்..
என்றும் உன் கண் வீச்சில் அசையும் இந்த கீற்று..
நீயோ என் சுவாசக்காற்று..........!!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
No comments:
Post a Comment