▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲


கண்ணீர் சிந்த 

எனக்கு மட்டும் 
ஆசையா என்ன...?? 
இது 
என் கடவுள் கொடுத்த வரம் 
அதனால்தான் 
அன்போடு ஏற்றுக்கொண்டேன் 

நீயே 
என் 
கடவுள் என்பதால்...!!


▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼



♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥



    பெண்ணே.....!! 

பிரிந்து போ என்று 

சொல்லாதே... 


பிரிவு என்ற சொல்லுக்கு 
என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை... 



என் நிழல்கூட உன் உருவத்தில் 

வாழ்கிறதே... 


என் நினைவுகள் 

உன்னருகில் இருப்பதை 
நீ ஏன் மறுக்கிறாய்.....



சொல் என் உயிரே.....




♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 



♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

என்னுயிரே...
இர‌வில் உற‌ங்கும் முன் 
உன் பெய‌ரை ஒரு முறை 
சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால் 
இறுதியில் நான் உச்சரித‌து 
உன் பெயராக வேண்டும் 
என்று...!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


============================

உயிரே..... 
என் காதலுக்கு 
உன் உதிரம் கொடுத்தாய்... 
என் கவிதைகளுக்கு 
மலர் இதழ் விரித்தாய்... 
எனக்காகவே நீயும் பிறக்கின்றாய்... 
மறக்க முயலவில்லை 
நினைக்கவும் மறக்கவில்லை.....

============================


♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

என்றும் என் நெஞ்சில் 
அழிவில்லாத கல்வெட்டாய் 
பொறிக்கப்பட்டது அவள் 
முகம் மட்டுமே....!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 


******************************


நிஜம் அழிந்தாலும் 
நினைவுகள் என்றும் 
அழிவதில்லை... 
அவள் நினைவுகளோடு... 
பயணிக்கிறது என் இதயம்...!!



******************************


ღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღ

ஹி ஹி ஹி இதுதான் காதலாம்....... 

சொல்லி வராதது காதல்..! 
சொல்ல முடியாததும் காதல்..! 

சுகமாய் வருவது காதல்..! 
சுமையாய் முடிவதும் காதல்..! 

துக்கத்தை வளர்ப்பது காதல்..! 
தூக்கத்தை தொலைப்பதும் காதல்..! 

கனவை தருவது காதல்..! 
நினைவை கலைப்பதும் காதல்..! 

நினைத்தால் இனிப்பது காதல்..! 
நினைவை இழப்பதும் காதல்..! 

உலகை உரைய வைப்பது காதல்..! 
உலகை இயக்குவதும் காதல்..! காதல்..!காதல்..!

ღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღ


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


அன்பே.....


ஆழமான உணர்வுகளையும், 
உண்மையான அன்பினையும், 
வெளிப்படுத்த முடியாது என 
சொல்லக் கேட்டிருக்கின்றேன், 


என் காதலை சொல்ல 
வார்த்தைகள் அருகிப்போனதற்கு 
இதுதான் காரணமோ....?? :P



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன்னோடு நான் இதுவரை பேசியதில்லை..
நான் பேசும் முதல் வார்த்தை இன்னும்
அகராதியில் அகப்படவில்லை.....

சிட்டுப்போல் என் மன வானில் பறப்பாய்..
மாலை செந்தேனாய் என் நெஞ்சில் சுரப்பாய்..
சின்ன மொட்டுபூ கண்களினால்...
மோகம் எனும் கவி படிப்பாய்...!
கண்டிப்பாய்...!!!

மின்வீச்சை ஒரு நாள் கண்டேன் ..!
அதை மிஞ்சி விட்டது உன் பார்வை என்பேன்..
என்றும் உன் கண் வீச்சில் அசையும் இந்த கீற்று..
நீயோ என் சுவாசக்காற்று..........!!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உயிரானவளே.....!!

என் இதயத் துடிப்பின் 
எண்ணிக்கை தெரியாது எனக்கு 
அனால் எப்பொழுது என் 
இதயம் நிற்குமென்று தெரியும் 
என் உயிர் நீ 
என்னைவிட்டு பிரியும் பொழுது...!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

இதுதான் காதலா ♥♥♥

இமைகளை மூடும்போதும் 
இமைக்குள்ளே அவள் நின்றாள் 

என் கனவாக 
என் சுவாச காற்றாக 
என் உடலில் ஓடும் உதிரமாக 
என்னை தாலாட்டி தூங்கவைக்கும் தாயாக 

என் நினைவலைகள் என்னையும் 
கடந்து சிந்திக்கின்றன 

ஒருவேளை இதைத்தான் காதல் என்று 
கவிஞர்கள் கவி பாடினார்களோ...??

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


என்னவளே ! 


இதுவரை சிரித்த சிரிப்பிற்கே 
அர்த்தம் புரியாமல் தவிக்கின்றேன் 
இனியும் எத்தனை நாட்கள் 
தரப்போகின்றாய்... 
மௌனத்தால் கொல்லும் 

அந்த புதுக்கலையை... 


உன்னைப்போல் ஒரு 
பேசும் ஊமைப்பெண்ணை 
கண்டதில்லை நான் 
என் வாழ்நாளில்... 



பெண்களின் சிரிப்பிற்கு பின்னால் 
எத்தனையோ அர்த்தங்கள் 
இருந்துவிட்டு போகட்டும் 
நீ மட்டும் சிரிக்காதே 



உன் சிரிப்பினால் 
மனம் சிறைபட்டு தவிப்பது போதும், 
எஞ்சியிருக்கும் நாட்களிலாவது 
சிரிக்க ஆசைபடுகின்றேன்... 



தரமுடியாவிட்டாலும், 
தட்டி பறிக்காதே !!!




♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உயிரே......

நீ சுவாசித்த காற்றை மட்டுமே 
சுவாசிக்க பழகி கொண்டேன் ...., 

உந்தன் அரவணைப்பில் தான் 
நேசம் என்றால் என்ன என்று 
புரிந்து கொண்டேன்...

என்னுடன் நீ பேசிய வார்த்தைகளை
சேமித்து வைத்துக்கொண்டேன் -எந்தன்
நாட்குறிப்பின் கவிதைகளாக ...

இதனையும் செய்த என்னால் -நீ
என்னை விட்டு சென்று விடுவாய்
என சொன்ன போது

எந்தன் விழிகளில் இருந்து வந்த
கண்ணீருக்கு தடை போட தெரியாமல்
போனது ஏனோ ..??

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


என்னவளே..

சப்தங்கள் இல்லாத 
தருணங்களிலேயே 
உன் கரம் பற்றிய போது
என்னுள் நடக்கிறது 
மௌன யுத்தம்...♥♥♥

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செல்லமே....!!


கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள் 
வானில் கொட்டிக் கிடந்தும் 
அதனை ரசிக்க மனமில்லையே 
கோதை, நீயென்னருகில் இருந்தால்...



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உயிரே....♥♥

நீ சொன்ன ஒரு வார்தையே
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥