உன்னோடு நான் இதுவரை பேசியதில்லை..
நான் பேசும் முதல் வார்த்தை இன்னும்
அகராதியில் அகப்படவில்லை.....
சிட்டுப்போல் என் மன வானில் பறப்பாய்..
மாலை செந்தேனாய் என் நெஞ்சில் சுரப்பாய்..
சின்ன மொட்டுபூ கண்களினால்...
மோகம் எனும் கவி படிப்பாய்...!
கண்டிப்பாய்...!!!
மின்வீச்சை ஒரு நாள் கண்டேன் ..!
அதை மிஞ்சி விட்டது உன் பார்வை என்பேன்..
என்றும் உன் கண் வீச்சில் அசையும் இந்த கீற்று..
நீயோ என் சுவாசக்காற்று..........!!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே !
இதுவரை சிரித்த சிரிப்பிற்கே
அர்த்தம் புரியாமல் தவிக்கின்றேன்
இனியும் எத்தனை நாட்கள்
தரப்போகின்றாய்...
மௌனத்தால் கொல்லும்
அந்த புதுக்கலையை...
உன்னைப்போல் ஒரு
பேசும் ஊமைப்பெண்ணை
கண்டதில்லை நான்
என் வாழ்நாளில்...
பெண்களின் சிரிப்பிற்கு பின்னால்
எத்தனையோ அர்த்தங்கள்
இருந்துவிட்டு போகட்டும்
நீ மட்டும் சிரிக்காதே
உன் சிரிப்பினால்
மனம் சிறைபட்டு தவிப்பது போதும்,
எஞ்சியிருக்கும் நாட்களிலாவது
சிரிக்க ஆசைபடுகின்றேன்...
தரமுடியாவிட்டாலும்,
தட்டி பறிக்காதே !!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உயிரே......
நீ சுவாசித்த காற்றை மட்டுமே
சுவாசிக்க பழகி கொண்டேன் ....,
உந்தன் அரவணைப்பில் தான்
நேசம் என்றால் என்ன என்று
புரிந்து கொண்டேன்...
என்னுடன் நீ பேசிய வார்த்தைகளை
சேமித்து வைத்துக்கொண்டேன் -எந்தன்
நாட்குறிப்பின் கவிதைகளாக ...
இதனையும் செய்த என்னால் -நீ
என்னை விட்டு சென்று விடுவாய்
என சொன்ன போது
எந்தன் விழிகளில் இருந்து வந்த
கண்ணீருக்கு தடை போட தெரியாமல்
போனது ஏனோ ..??
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உயிரே....♥♥
நீ சொன்ன ஒரு வார்தையே
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Subscribe to:
Posts (Atom)